சென்னையை தொடர்ந்து மதுரையை மிரட்டும் கொரோனா தொற்று பரவல்

மதுரையில், கொரோனா பாதிப்பு தீவிரத்தை தொடர்ந்து, படுக்கை வசதிகளை அதிகப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னையை தொடர்ந்து மதுரையை மிரட்டும் கொரோனா தொற்று பரவல்
x
மதுரை மாநகரில் தினசரி சராசரியாக 250க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதேநிலை தொடரும் பட்சத்தில் மதுரையில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தற்போது உள்ள 4 ஆயிரத்து 600 படுக்கை வசதியில், 3 ஆயிரத்து 199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. எந்த அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பாளர்களுக்காக, மதுரை வேளாண்மை கல்லூரி, திருப்பரங்குன்றம் தனியார் பொறியியல் கல்லூரி காமராஜர் பல்கலைக்கழகம் விடுதி என மொத்தம் 2400 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன. மேலும் தேவைப்படும் பட்சத்தில் 21 கல்லூரிகளில் முகாம்கள் அமைக்க மதுரை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்