"ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், கொரோனா நிவாரணத் தொகையை 94 சதவீதம்  பெற்றுக் கொண்டதாக கூறினார். பொது விநியோகத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என கூறிய அவர், எப்போதும் போல விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்