4 கொரோனா பரிசோதனை மையங்களின் அனுமதி ரத்து - சுகாதாரத்துறை நடவடிக்கை

கோவையில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்ட 4 பரிசோதனை மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதை தொடர்ந்து, அந்த பரிசோதனை மையங்களுக்கான அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்தது.
4 கொரோனா பரிசோதனை மையங்களின் அனுமதி ரத்து - சுகாதாரத்துறை நடவடிக்கை
x
கோவையில், கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்ட 4 பரிசோதனை மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதை தொடர்ந்து, அந்த பரிசோதனை மையங்களுக்கான அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்தது. கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை தவிர்த்து 8 தனியார் மையங்களில் கொரொனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. இந்நிலையில் கோவையில் உள்ள 4 தனியார் பரிசோதனை மையங்கள் விதிமுறைகளை மீறி கூடுதல் பரிசோதனை செய்வது குறித்த புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் 4 மையங்களின் அனுமதியையும் ரத்து செய்த சுகாதாரத்துறை, இது குறித்து விசாரித்து வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்