கடந்த 3 ஆண்டுகளை விட இயற்கை இறப்பு குறைவு - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கடந்த 3 ஆண்டுகளைவிட தற்போது இயற்கை இறப்புகள் குறைந்து உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளை விட இயற்கை இறப்பு குறைவு - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
x
கடந்த 3 ஆண்டுகளைவிட தற்போது இயற்கை இறப்புகள் குறைந்து உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மருத்துவ முகாமை மாநகராட்சி துவக்கி வைத்த  அவர், பின் செய்தியாளிடம் பேசினார். கடந்த 3 ஆண்டுகளில் இந்த வருடம் இயற்கை இறப்புகள் குறைந்து உள்ளதாக கூறிய அவர், குறிப்பாக கடந்த 2018 ஏப்ரல் மாதம் 4 ஆயிரத்து 859 பேரும், மே மாதம் 5 ஆயிரத்து149 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறினார். 2019 ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், 5 ஆயிரத்து 738 இயற்கை இறப்புகள ஏற்பட்டதாக கூறிய அவர், கடந்த மே மாதத்தில், 4 ஆயிரத்து 532 இயற்கை இறப்பு நடந்ததாக புள்ளி விவரம் அளித்தார். இது கடந்த 3 ஆண்டுகளை விட குறைவு என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்