மார்த்தாண்டம் புதிய பாலத்தில் செல்ல இஸ்ரோ வாகனத்திற்கு அனுமதி மறுப்பு

மார்த்தாண்டம் புதிய பாலத்தில், 70 டன் எடைக்கொண்ட உபகரணத்தை எடுத்துச் செல்ல இஸ்ரோ வாகனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
மார்த்தாண்டம் புதிய பாலத்தில் செல்ல இஸ்ரோ வாகனத்திற்கு அனுமதி மறுப்பு
x
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு  மும்பையில் இருந்து  8 மாதத்திற்கு முன்பு, 70 டன் எடை கொண்ட உபகரணங்கள், கொண்டதாகும். இந்த உபகரணத்தை ஏற்றிக் கொண்டு வரும் வாகனம், ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் என்ற அளவில் நகர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால்  எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் ஏற்கனவே ஆன நிலையில், தற்போது, கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் 140 டன் பாரத்தை தாங்கும் சக்தி கொண்டது என அதனை கட்டிய நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ஆனால், அந்த வாகனத்தை பாலத்தில் அனுமதிக்க மத்திய அரசின் தகுதி சான்று தேவைப்படுகிறது. இதனால், அந்த வாகனத்தை மேம்பாலம் வழியாக கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்ட நிலையில், ஆற்றூர், அருமனை வழியாக மாற்றுப் பாதையில் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல இஸ்ரோ அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்