தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி போலீஸ் விசாரணை தீவிரம்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
x
டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் பல குழுவாக பிரிந்து ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிசிஐடி எஸ்.ஐ. பிறைச்சந்திரன் தலைமையிலான குழு, ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை அமைந்துள்ள இடத்தை நேரில் பார்வையிட்டது. பின்னர், தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்து சென்ற போது, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் குறித்து, மக்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்