செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்தை கடந்து வேகமெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று
x
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்தை கடந்து வேகமெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடங்கிய பின், மே மாதம் வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 177 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. இதில், 610 பேர் நலமான நிலையில், 555 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழப்பு 11 பேராக இருந்தது. ஆனால், ஜூன் மாத தொடக்கம் முதல் பாதிப்பு எண்ணிக்கை மளமளவென உயர்ந்து, 4 ஆயிரத்து 242 பேராக விஸ்வரூபம் எடுத்தது. ஜூன் மாதத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். தாம்பரம், பல்லாவரம், பரங்கிமலை, காட்டாங்குளத்தூர், 15 பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்