தமிழகத்தில் ஒரேநாளில் 3,645 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு - 74,622

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 3 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 3 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து 41 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ள நிலையில், 32 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னையில் 1,956 பேருக்கு தொற்று - மொத்த பாதிப்பு-49,690


சென்னையிலும் புதிய உச்சமாக ஒரேநாளில், ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவிலிருந்து, 28 ஆயிரத்து 823 பேர் குணமடைந்துள்ள நிலையில், 20 ஆயிரத்து 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்