முழு ஊரடங்கு - கண்காணிப்பு வளையத்தில் மதுரை

மதுரையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
x
காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளை திறக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் ஆகிய 3 முக்கிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளை கண்காணிக்க ஏற்கனவே 6 சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 266 டாஸ்மாக் கடைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பகுதிகளில் உள்ள 150 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 116 கடைகள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்