தொடர்ந்து 15 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 15 நாட்களாக விலை உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 15 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
* கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மார்ச் மாதத்தில் இருந்து மாற்றம் இல்லாமல் இருந்தது

* ஆனால் கடந்த இரண்டு வாரமாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன், இன்றும் 15 வது நாட்களாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

* இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 58 காசுகளாகவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

* கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 4 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 58  காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

* உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைக் கண்டது.

* தற்போது, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.

* இந்த நிலையில், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

* இந்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு  காரணமாக உள்ளதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்