பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் பங்கேற்பு

பிரதமர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் இது மிக அவசியமான கூட்டம் என்றார்.
பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் பங்கேற்பு
x
பிரதமர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளரும்  தமிழக துணை முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் இது மிக அவசியமான கூட்டம் என்றார். தேசத்தையும், தேசத்தின் எல்லைகளையும் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு இது என்றார். பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் போர் நடவடிக்கைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த நகைகள் வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார், நெருக்கடியான நிலையை பிரதமர் புத்திசாலிதனத்துடனும் , உறுதியுடனும் கையாள்வதாக அவர் பாராட்டினார். எதிரிகளின் எந்த முயற்சியையும் நிச்சயம் வெல்வோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்