கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் உயிரிழப்பு 500ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 37 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் கொரோனாவிலிருந்து இதுவரை 19 ஆயிரத்து 686 பேர் குணமடைந்துள்ளனர். 16 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு, சென்னையில் மட்டும் இதுவரை 501 பேர் உயிரிழந்துள்ளனர்
Next Story

