சிறப்பு விமானத்தில் வந்தது, ராணுவ வீரர் பழனியின் உடல்

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று காலை உடல் அடக்கம் நடைபெறுகிறது.
சிறப்பு விமானத்தில் வந்தது, ராணுவ வீரர் பழனியின் உடல்
x
லடாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று நள்ளிரவு, சிறப்பு விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு மதுரை ஆட்சியர் மற்றும் ராணுவ, துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதுபோல மதுரை எம்பி வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் மற்றும் காவல் அதிகாரிகளும் பழனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார், ஆட்சியர் - அரசு மரியாதை மற்றும் ராணுவ மரியாதையுடன் இன்று காலை நல்லடக்கம்

மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு, ஆம்புலன்ஸ் மூலமாக பழனியின் சொந்த ஊரான கடுக்கலூருக்கு உடல் கொண்டு வரப்பட்டது.  ஊர் எல்லையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்திற்கு உடல் மாற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. நள்ளிரவிலும் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து,  உறவினர்கள், பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக பழனியின் உடல் வைக்கப்பட்டது. பழனி உடலை கண்டு அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. 


Next Story

மேலும் செய்திகள்