திருடனை ஈர்த்த மீன் குழம்பு வாசம் - திருட்டைவிட்டு பசி போக்கிய திருடன்

கன்னியாகுமரி அருகே திருட வந்த இடத்தில் மீன் குழம்பை சாப்பிட்டு, பசியாற்றிய, சாதுர்ய திருடனை போலீசார் கைது செய்தனர்.
திருடனை ஈர்த்த மீன் குழம்பு வாசம் - திருட்டைவிட்டு பசி போக்கிய திருடன்
x
பரைக்கோடு பகுதியில் உள்ள வீடுகளில் நகை, பணம் எதுவும் கிடைக்காததால், திருடன் ஏமாற்றம் அடைந்தான். பின்னர் ஒரு வீட்டில் மணக்க மணக்க  இருந்த மீன் குழம்பை, ருசித்து சாப்பிட்டுவிட்டு, மொட்டை மாடியில் படுத்து உறங்கிவிட்டான். விடிந்ததும் யாரோ ஒருவர் இருப்பதை பார்த்து, எதிர்வீட்டுக்காரர் சப்தம் எழுப்பியுள்ளார். இதைகேட்டு விழித்த திருடன் அங்கிருந்து தப்ப முயன்ற போது, பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். அப்போது தனக்கு கொரோனா இருப்பதாக கூறி, அங்கிருந்து சாதுர்யமாக தப்பிச் சென்றான். சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த 31 வயதான சதீஷ் என்பவரைக் கைது செய்தனர். இவர் ஏற்கனவே, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்