கற்கள் சிதறி விழுந்து கோயில் காவலாளி பலியான சோகம் - மலையை உடைக்க வெடி வைத்த போது நடந்த விபரீதம்

மதுரை அருகே மலையை உடைக்க வெடிவைத்த போது கற்கள் சிதறி விழுந்ததில் கோயில் காவலாளி ஒருவர் உயிரிழந்தார்.
கற்கள் சிதறி விழுந்து கோயில் காவலாளி பலியான சோகம் - மலையை உடைக்க வெடி வைத்த போது நடந்த விபரீதம்
x
மதுரை-தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் தர்மசாஸ்தா கோவில்  உள்ளது. இந்த கோயிலின் காவலாளியாக ஆண்டி மற்றும் சிவராமன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் கோயிலின் பின்புறம் உள்ள பகுதியில் நடந்து சென்ற போது, கணவாய் மலையை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடி திடீரென வெடித்தது. இதில் இருந்து சிதறிய கற்கள் 2 பேர் மீதும் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆண்டி பரிதாபமாக இறந்தார். சிவராமனுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. முன் அறிவிப்பு இன்றி பாறைகளுக்கு வெடி வைத்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்