சண்டே மார்க்கெட் பகுதியில் தடையை மீறி கடைகள் - போலீசார் அகற்றியதால் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரியில் உள்ள சண்டே மார்கெட் பகுதியில், தடையை மீறி போடப்பட்ட கடைகளை போலீசார் அகற்றியதால், போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சண்டே மார்க்கெட் பகுதியில் தடையை மீறி கடைகள் - போலீசார் அகற்றியதால் வியாபாரிகள் வாக்குவாதம்
x
புதுச்சேரியில் உள்ள சண்டே மார்கெட் பகுதியில், தடையை மீறி போடப்பட்ட கடைகளை போலீசார் அகற்றியதால், போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த சண்டே மார்கெட் கொரோனா காரணமாக இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தடையை மீறி வியாபாரிகள் கடைகளை அமைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார், கடைகளை அகற்ற முற்பட்டனர். அப்போது வியாபாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வியாபாரிகள் கடைகளை அகற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்