அமைச்சர் சேவூர் ராமசந்திரன் காலில் விழுந்த மூதாட்டி

ஆரணி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவர் திடீரென காலில் விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அவருக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் சேவூர் ராமசந்திரன் காலில் விழுந்த மூதாட்டி
x
ஆரணி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவர் திடீரென  காலில் விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அவருக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை பணி பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்ற போது மூதாட்டி ஒருவர் திடீரென அவர் காலில் விழுந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்ட்ட தனது கணவர் கால்களை  இழந்துள்ளதகாவும் எனவே வறுமையில் வாடும் தமக்கு உதவ வேண்டும் என அமைச்சரிடம் மூதாட்டி கேட்டுககொண்டார். இதனையடுத்து மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்த கொடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்