இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் பயணம் - 525 டூவீலர், 5 ஆட்டோ, 4 கார்கள் பறிமுதல்

இ-பாஸ் இல்லாமல் செங்கல்பட்டு மாவட்ட எல்லையை கடக்க முயன்றவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் பயணம் - 525 டூவீலர், 5 ஆட்டோ, 4 கார்கள் பறிமுதல்
x
சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இபாஸ் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்வதாக தகவல் பரவியது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, வண்டலூர் பரனூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் 180க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் இ-பாஸ் உள்ளிட்ட ஆவணகளின்றி வந்த 525 இரு சக்கர வாகனங்கள், ஐந்து ஆட்டோக்கள், நான்கு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காவல்துறை அறிவுரையை ஏற்ற சிலர் மீண்டும் சென்னைக்கு திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்