மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு - அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
x
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்படும் இடங்களில்,  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார். இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தகுதியான மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாகவும்  இதற்கு மத்திய அரசே காரணமாக இருக்கக்கூடாது என்றும் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் மதிமுக சார்பில் இதுகுறித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு வர உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்