கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம் - அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தமிழகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விட வேண்டும் எனவும், அன்றைய தினமும், அதற்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும், அரசு அலுவலகங்களை, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Next Story
