தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - கடந்த 12 நாட்களில் மட்டும் 194 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - கடந்த 12 நாட்களில் மட்டும் 194 பேர் உயிரிழப்பு
x
தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனையில் 8 பேர், அரசு மருத்துவமனையில் 10 பேர் என 18 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஜூன் 12ஆம் தேதி நேற்று 15 பேர் உயிரிழந்ததால், சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 294  ஆக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா மரணங்கள், கடந்த பத்து தினங்களாகவே இரட்டை இலக்கில் புதிய உச்சத்தை தொட்டு வருவது மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதிகொரோனாவால் உயிரிழப்பு இரட்டை இலக்கத்தை எட்டியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். ஜூன் 9-ஆம் தேதி மொத்த இறப்பு 20ஐ தாண்டியது,  ஜூன் 11-ஆம் தேதி மொத்த இறப்பு 23ஐ கடந்ததால் மக்களிடையே அச்சம் தொடர்ந்தது.  ஜூன் 11 வரை  176 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர். கடந்த 12 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்