பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7வது நாளாக உயர்வு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7 வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7 வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு இன்று 52 காசுகள் உயர்ந்து 78 ரூபாய் 99 காசுகளாக உள்ளது. டீசல் லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 64 காசுகளாக விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை 3.45 ரூபாயும், டீசல் விலை 3.42 ரூபாயும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக பணப்புழக்கம் இல்லாத நிலையில், இந்த விலை ஏற்றத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசு விதித்த கூடுதல் கலால் வரியை வாடிக்கையாளர்கள் தலையில் எண்ணை நிறுவனங்கள் சுமத்துவதே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
*******************
*******************
Next Story

