நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவமனைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
x
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ண‌ன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடமாடும் மருத்துவமனைகளை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 15 மண்டலங்களுக்கும் 173 நடமாடும் மருத்துவமனைகள் நேரில் சென்று பரிசோதனை செய்ய உள்ளன. தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் நடமாடும் மருத்துவமனை வாகனங்களில் வைத்து மருத்துவமனை அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்