சமூகவலைதளங்களில் தொடரும் நூதன மோசடி - காவல்துறை அதிகாரிகள் இளைஞர்களுக்கு அறிவுரை

சமூக வலைதள பயன்பாடு அன்றாட தேவையாகிவிட்ட நிலையில், அதன் மூலம் மோசடிகள் நடப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சமூகவலைதளங்களில் தொடரும் நூதன மோசடி - காவல்துறை அதிகாரிகள் இளைஞர்களுக்கு அறிவுரை
x
சமூக வலைதள பயன்பாடு அன்றாட தேவையாகிவிட்ட நிலையில், அதன் மூலம் மோசடிகள் நடப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

சமூக வலைதளங்கள் மூலம் ஒருபுறம் பல்வேறு ஆக்கபூர்வமான வேலைகள் நடந்தாலும், ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற மோசடிகளும் மறுபுறம் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. மதுரையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி பண மோசடி செய்வது அதிகரித்து வருவதாகவும், கடந்த 15 நாட்களில் 4 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறுகின்றனர்,  காவல்துறை அதிகாரிகள்....மதுரை பைபாஸ் சாலையை சேர்ந்த ஒருவரிடம், அவரது நண்பர் மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் வாயிலாக நட்பை ஏற்படுத்திக் கொண்டு பண உதவி செய்யும் படி கேட்டு,  2 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்து ஒருவர் மோசடி செய்துள்ளார். வில்லாபுரம் விக்னேஷ் என்பவர், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான கல்லுாரி மாணவியை காதலிப்பது போல் நடித்து நகை, பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் 'டிக்டாக்' மூலம் அறிமுகமான பெண்ணிடம் எல்லீஸ் நகர் ராமச்சந்திரன் என்பவர் 97 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளார். திருப்பூர் சுசி என்ற பெண்ணுடன் 'டிக்டாக்'கில் பழகி பணத்தை இழந்த பிறகுதான் அது போலி கணக்கு என தெரிந்தது. குறிப்பாக பெண்கள் பெயரில் போலி ஐ.டி.,கள் ஏற்படுத்தி சபலம் உள்ள ஆண்களிடம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் சமூக வலைதளங்களில் செலவிடும் நேரம் பயனுள்ளதாக இருந்தால் இது போன்ற சிக்கல்கள் வராது என கூறுகிறார்,  மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிகுமார்.

Next Story

மேலும் செய்திகள்