மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பெருவளை வாய்க்கால் தலைப்பு பாலம் இடிந்தது- 20,000 ஏக்கர் நிலத்தின் பாசனம் கேள்விக்குறி

மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், முக்கொம்பு மேலணையில் இருந்து பிரிந்து செல்லும் பெருவளை வாய்க்காலின் தலைப்பு பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பெருவளை வாய்க்கால் தலைப்பு பாலம் இடிந்தது- 20,000 ஏக்கர் நிலத்தின் பாசனம் கேள்விக்குறி
x
இன்று காலை பெருவளை வாய்க்கால் தலைப்பு பகுதியில் தூர் வாரும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாய்க்காலில் தண்ணீர் பிரித்து அனுப்பும் தலைப்பு பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து பாலத்தை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பாலம் உடைந்ததால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. 1934ஆம் ஆண்டு பொதுப்பணித் துறையினரால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியாக, 39 கி.மீ., தூரம் பெருவளை வாய்க்கால் பயணிக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் இந்த வாய்க்காலின் தலைப்பு பாலம் உடைந்து உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்