விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தல் - ரூ.40 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு 200 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தல் - ரூ.40 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்
x
விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு 200 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. கோவையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, அவர்கள் வெள்ளக்கிணறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை சோதனை செய்ததில், 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா சிக்கியது.
இதுதொடர்பாக மதுரை சேர்ந்த லாரி ஓட்டுனர் பார்த்த சாரதியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்