கொடைக்கானல்: காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் நகருக்குள் வர தொடங்கியுள்ள காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானல்: காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட  பொதுமக்கள் கோரிக்கை
x
கொடைக்கானல் நகருக்குள் வர தொடங்கியுள்ள காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது பேரி பழ சீசன் துவங்கி உள்ளது . பேரி பழங்களை சாப்பிடுவதற்காக அதிக எண்ணிக்கையிலான காட்டெருமைகள்  வனப்பகுதியில் இருந்து நகர் பகுதியை நோக்கி வலம் வர தொடங்கி உள்ளது. மேலும் பேரி மரங்களில் உள்ள பழங்களை சாப்பிட்டும் மரங்களை சேதப்படுத்தியும் வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே காட்டெருமைகளை வனப்பகுதிகளுக்குள் நிரந்தரமாக விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Next Story

மேலும் செய்திகள்