வேறு ஒருவருடன் பேசியதால் பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கள்ளக்காதலன் - முறையற்ற உறவால் நேர்ந்த விபரீதம் கொடூரம்

சென்னை அருகே தன் கள்ளக்காதலி வேறு ஒரு நபருடன் பேசியதால் ஆத்திரமடைந்த நபர், அந்த பெண்ணை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேறு ஒருவருடன் பேசியதால் பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கள்ளக்காதலன் - முறையற்ற உறவால் நேர்ந்த விபரீதம் கொடூரம்
x
சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியை  சேர்ந்தவர் யசோதா ராணி. 42 வயதான இவர், பெருங்களத்தூரில் டெய்லரிங் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கும் கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக் காதலாக மாறியது. டெய்லரிங் கடையில் இருந்த யசோதா ராணியிடம் காதலை வளர்த்து வந்தார் செல்வகுமார். 

இந்த சூழலில் தான் சம்பவத்தன்று கடைக்கு வந்த செல்வக்குமார் யசோதாராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரச்சினை முற்றவே அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து யசோதாராணியின் கழுத்தில் குத்தினார். இதில்  யசோதாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், கொலையாளி செல்வக்குமார் என உறுதியானது. பெருங்களத்தூர் அருகே உள்ள பாலத்தின் கீழ் பதுங்கியிருந்த செல்வக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செல்வக்குமாருக்கும், யசோதா ராணிக்கும் இடையே திருமணத்துக்கு முன்பாகவே உறவு இருந்துள்ளது. ஆனால் இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்துள்ளனர். இவர்களின் உறவை அறிந்த செல்வக்குமாரின் மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்றுள்ளார். இதனால் தனியாக வசித்து வந்த செல்வக்குமார் யசோதா ராணியுடன் கூடுதல் உரிமையோடு பழகி வந்துள்ளார். இந்த சூழலில் தான் யசோதா ராணி வேறு ஒருவரிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதை பார்த்த செல்வக்குமாருக்கு ஆத்திரம் அதிகமாகி உள்ளது. 

நான் இருக்கும் போது நீ வேறு ஒருவருடன் எப்படி பேசலாம்? என கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினையும் இருந்துள்ளது. இதனிடையே, யசோதா ராணியின் மகளுக்கு பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்வதாக கூறியிருக்கிறார் செல்வக்குமார். 

ஆனால் தான் செல்போனில் பேசி வரும் நபர் தன் மகளுக்கு கேக் ஆர்டர் செய்துவிட்டதாக யசோதாராணி கூறியதால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார் செல்வக்குமார். இதனால் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், யசோதாவின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்தி கொன்றுள்ளார். அவர் அளித்த இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்