தடை செய்யப்பட்ட புகையிலை ஏற்றி வந்த லாரி பறிமுதல் - டெல்லியில் இருந்து நெல்லைக்கு கடத்த முயன்றதாக தகவல்

சேலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில் கடத்திச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை ஏற்றி வந்த லாரி பறிமுதல் - டெல்லியில் இருந்து நெல்லைக்கு கடத்த முயன்றதாக தகவல்
x
சேலம் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது ஒரு லாரியை போலீசார் நிறுத்த முயன்ற போது நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து லாரியை விரட்டிப் பிடித்த போலீசார் சோதனை நடத்தியதில் 100 மூட்டைகள் போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும் என்றும் தெரியவந்தது. இந்த லாரி டெல்லியிலிருந்து போதைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சேலம் வழியே நெல்லைக்கு செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் லாரியில் இருந்து தப்பியோடிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்