காட்மேன் இணையதள தொடர் தொடர்பான வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு முன்ஜாமீன்

காட்மேன் இணையதள தொடர் இயக்குனர் பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பாளர் இளங்கோவுக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காட்மேன் இணையதள தொடர் தொடர்பான வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு முன்ஜாமீன்
x
காட்மேன் இணையதள தொடர் இயக்குனர் பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பாளர் இளங்கோவுக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூப் சேனலில், காட்மேன் என்ற இணையதள தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியானது.இது, குறிப்பிட்ட பிரிவினரை மத ரீதியிலான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பாளர் இளங்கோவுக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்