ரத்து செய்யப்பட்ட தேர்வு - அவசரப்பட்ட மாணவி
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பே தேர்வு பயத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உதய தர்ஷினி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை அன்று உதய தர்ஷினி ஹால் டிக்கெட் பெற்று வந்துள்ளார். அதன் பின், உதய தர்ஷினி மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்று இரவே வீட்டுக்குள் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அன்று இரவே வீட்டுக்குள் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

