3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பா ? - அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெளியான தகவலால் பரபரப்பு
சென்னையில் 3 லட்சத்துக்கு 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் 3 லட்சத்துக்கு 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 6 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் 38 ஆயிரத்து 198 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை 1.5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் 200 ஆக அதிகரிக்கப்படும் என்றும், 2 லட்சம் பேர்களுக்கு ஹோமியோபதி மருந்து கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Next Story