அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும்" - ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு

அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும் - ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
x
அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளையும், பொருளாதார மீட்பு முயற்சிகளையும் கண்டு ஸ்டாலின் கதிகலங்கி வருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயம் தேடி மறுவாழ்வு பெறும் நோக்கத்தோடு , திமுக தலைவர் ஸ்டாலின், பொய் பிரசாரங்களில் தொடந்து ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்