10ம் வகுப்பு தேர்வு: 2 மாதங்கள் தள்ளி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு: 2 மாதங்கள் தள்ளி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
x
பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.  மேலும், தேர்வுப் பணிகளில் சுகாதார துறையினர் எந்த அளவுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள் என அரசு விளக்கம் அளிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்