ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளை வழக்கு - வங்கி ஊழியரை கைது செய்த காவல்துறை

சென்னை மதுரவாயல் ஏடிஎம்மில், கிருமி நாசினி தெளிப்பதாக கூறி, 13 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்த விவாரத்தில், வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளை வழக்கு - வங்கி ஊழியரை கைது செய்த காவல்துறை
x
சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிப்பதாக உள்ளே புகுந்த மர்ம நபர், 13 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றார். இது குறித்து தனியார் வங்கி மேலாளர் கொடுத்த புகாரைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அங்கிருந்த, சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை தேடிவந்தனர்.  

ஏடிஎம் உடைக்கப்படாமல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால், இதில் வங்கி ஊழியருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கி ஊழியர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிவானந்தம் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வங்கி ஊழியர் சிவானந்தத்தை, காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், வீட்டு மற்றும் வாகன கடன்களுக்கான மாதத்தவணை செலுத்த, 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சிவனாந்தம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 9 லட்சத்தை காவல்துறையினர் மீட்டனர். வங்கி ஊழியரே ஏடிஎம் மையத்தில் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்