மாஞ்சா கயிறு அறுத்து சிறுவன் காயம் : காற்றாடி மாஞ்சா நூல் தயாரித்த 3 பேர் கைது

சென்னையில் 3வயது சிறுவன் காயம் அடைந்ததை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மாஞ்சா கயிறு அறுத்து சிறுவன் காயம் : காற்றாடி மாஞ்சா நூல் தயாரித்த 3 பேர் கைது
x
சூளைமேட்டில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின், கண் மற்றும் மூக்கை காற்றாடி மாஞ்சா நூல் கிழித்து சென்றது. இது குறித்து சிறுவனின் தாய் பிரியங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். நான்கே மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் வாட்ஸ்அப் குழு அமைத்து, ரகசியமாக காற்றாடி போட்டி நடத்திய தெரியவந்தது. கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்த பிரபாகரன், சீனிவாசன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 காற்றாடி, மாஞ்சா தடவிய நூல் கண்டுகள், லோட்டாய், 2 மின் மோட்டார்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்