திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதன்படி,  செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆயிரம் குடியிருப்புகள் அமைய உள்ளது. ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம்  வழங்கினார். இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இசை மேதை நல்லப்பசுவாமி நினைவுத் தூணையும் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்