குடிநீருக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு

மதுரை மாவட்ட குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு
x
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது, 41 புள்ளி 88 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையில் இருந்து மதுரை மாநகரம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுதால்,ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மதுரை மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, இன்று  மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு 28-ம் தேதிவரை தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.முதல் நாளான இன்று, வினாடிக்கு ஆயிரத்து  500 கனஅடி திறக்கப்பட்டது. இரண்டாவது நாளில் 850 கனஅடியாகவும்,3-வது நாளில் 300 கனஅடியாக தண்ணீர் குறைக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்