"தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 17ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை 118 பேர் பலி உள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 407 பேர் குணமடைந்து  வீடு திரும்பியதாகவும், இதுவரை 8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Next Story

மேலும் செய்திகள்