ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.
x
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 66 பேர் இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின், ஊரடங்கின் போது  திமுகவின் ஒன்றிணைவோம் திட்டத்திற்காக தொண்டர்கள் களத்தில் நி்ன்று வேலை பார்த்தது மிகவும்  மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்த மக்கள் மக்கள் பணி கட்சிக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். திமுக சார்பில் 22 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் செயல்பாடுகளை கண்டு பிறகட்சியினர் பொறாமைபடுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்