10ஆம் வகுப்பு தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவும்" - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து பொதுத்தேர்வுக்கு செல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
10ஆம் வகுப்பு தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவும் - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்
x
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து பொதுத்தேர்வுக்கு செல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நிலை நீங்கி, இயல்பு வாழ்க்கை திருப்பியதும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாத காலம் சிறப்பு பயிற்சி அளித்து, தேர்வுக்கு செல்வது தான் பொருத்தமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு, அவசரப்பட்டு தற்போது அறிவித்துள்ள தேர்வு தேதிகளை மறுபரிசீலனை செய்து, தேர்வு தேதிகளை மாற்றி அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்