தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் - சென்னை வானிலை மையம்

திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
x
அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் என்றும், அந்தமான் நிகோபார் பகுதியில் வரும் 16ஆம் தேதி தென் மேற்கு பருவழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அரியலூர், தஞ்சை, கடலூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்பதால், மக்கள் அடுத்த 2 நாட்களுக்கு காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்