மே 17க்கு பிறகு என்ன? - வரும் புதன் கிழமை தமிழக முதலமைச்சர் ஆலோசனை

வரும் 17ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை நடத்த உள்ளார்.
மே 17க்கு பிறகு என்ன? - வரும் புதன் கிழமை தமிழக முதலமைச்சர் ஆலோசனை
x
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனை தொடர்ந்து, கொரனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக்குழு, கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், அரசுக்கு ஆலோசனை சொல்லவும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்