வட்டி கொடுமையால் நடந்த சம்பவம் - கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

திருவள்ளூரில் கந்துவட்டி கொடுமையால் கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட்டி கொடுமையால் நடந்த சம்பவம் - கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி மஞ்சுளா. 8 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சரத்குமார் அந்த பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 

சரத்குமாருக்கு பணத் தேவை இருந்த நிலையில் எண்ணூரை சேர்ந்த பாபு என்பவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை சரத்குமார் தர தாமதம் ஆக்கவே அடிக்கடி வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டுள்ளார் பாபு. அப்போது சரத்குமாரின் மனைவி மஞ்சுளாவிற்கும் பாபுவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் வீட்டில் பிரச்சினை வெடிக்கவே மஞ்சுளா தன் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த சூழலில் தான் சரத்குமார் திடீரென தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வாக்குமூலமாக வெளியிட்டுள்ளார் சரத்குமார். 

தன்னுடைய மரணத்திற்கு கந்துவட்டி  கொடுமையே என்றும், பாபு தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். சரத்குமாரின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேநேரம் இந்த சம்பவத்துக்கு காரணமான பாபுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சரத்குமாரின் உறவினர்கள் மீஞ்சூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்