அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை : 12 பேருக்குரிய இடத்தில் 20 நோயாளிகள் - வேறு இடத்திற்கு மாற்ற அரசுக்கு கோரிக்கை

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை : 12 பேருக்குரிய இடத்தில் 20 நோயாளிகள் - வேறு இடத்திற்கு மாற்ற அரசுக்கு கோரிக்கை
x
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 49 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகளுக்கு மிக அருகே மகப்பேறு சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது. இதனால் மகப்பேறு தாய்மார்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 12 பேர் வரை மட்டுமே தங்கவைக்க முடியும் என்ற இடத்தில் 20 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்லும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்