டிக் டாக் செய்ய வற்புறுத்தியதால் தகராறு - குடிபோதையில் இளைஞர் அடித்துக்கொலை

ராணிப்பேட்டை அருகே டிக் - டாக் தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் செய்ய வற்புறுத்தியதால் தகராறு - குடிபோதையில் இளைஞர் அடித்துக்கொலை
x
காந்தி நகரை சேர்ந்த இளைஞர் ராபர்ட் தன்னோடு டிக்டாக் செய்ய வருமாறு   நண்பரான விக்னேஷை அழைத்துள்ளார். இதற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்கவே ராபர்ட்க்கும் விக்னேஷ்க்கும் மோதல் எழுந்துள்ளது. 
இதை விக்னேஷ் தனது அண்ணனான விஜய்யிடம் தெரிவிக்க கோபமடைந்த விஜய் ராபர்ட்டை மிரட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த விஜய் தனது நண்பர்கள் 7 பேருடன் ராபர்ட் வசிக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ராபர்ட்டையும் அவரது நண்பர் போஸையும் அவர்கள்  தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது ராபர்ட் தப்பியோடிய நிலையில், படுகாயம் அடைந்த போஸ் உயிரிழந்தார். இது தொடர்பாக விஜய் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்