"பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜூன் மாதமும் நியாயவிலைக்கடைகளில் பொது மக்களுக்கு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுபடுத்துவது தொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது.  இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. திரிபாதி, மாநகர ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனர். சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக  விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.




Next Story

மேலும் செய்திகள்