உணவு டெலிவரி செய்யும் இளைஞருக்கு கொரோனா - உணவு டெலிவரி செய்த வீடுகளின் முகவரி சேகரிப்பு

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி செய்யும் இளைஞருக்கு கொரோனா - உணவு டெலிவரி செய்த வீடுகளின் முகவரி சேகரிப்பு
x
வளசரவாக்கத்தை சேர்ந்த 26 வயது நபர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அவருக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அவர் பணியில் இருந்த போது யாருக்கெல்லாம் உணவு டெலிவரி செய்தார் என்பது தொடர்பான விவரங்களை சேகரித்து, அந்த இடங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்