இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று - காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

தலைமை காவலர் உள்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்குள் செல்ல காவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று - காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
x
நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் உள்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்குள் நுழைய காவலர்கள் அஞ்சுகின்றனர்.  அங்கு பணியாற்றி வரும்  காவலர்கள் அனைவரும், சாலையோரத்தில் உள்ள பூட்டப்பட்ட கடைகளின் முன்பு அமர்ந்து இருந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்