ஆதரவற்றவர்களை மகிழ்விக்க தன் உடல்நிலை குறித்து கவலைப்படாமல் நடனமாடிய கல்லூரி மாணவி

தன் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஊரடங்கு காரணமாக தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றவர்களை நடனமாடி மகிழ்வித்த கல்லூரி மாணவியின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஆதரவற்றவர்களை மகிழ்விக்க தன் உடல்நிலை குறித்து கவலைப்படாமல் நடனமாடிய கல்லூரி மாணவி
x
தன் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஊரடங்கு காரணமாக தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றவர்களை நடனமாடி மகிழ்வித்த கல்லூரி மாணவியின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஏஞ்சலின் ஷெர்லீன், சிறுவயது முதலே நடனம் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக பரதம், குச்சிபுடி, கரகம், சிலம்பம், என 50க்கும் மேற்பட்ட நடனங்களை கற்ற இவர், கடலூரின் நாட்டிய தேவதை என அழைக்கப்படுகிறார். நாளமில்லா சுரப்பி இல்லாமல் பிறந்த இவர், அடிக்கடி துவண்டு விழுந்து விடுவார் என்றும் அப்போது, அவரை மருத்துவமனையில் சேர்த்து  பிழைக்க வைப்பது கடினம் என கூறப்படுகிறது.

.இந்நிலையில், ஊரடங்கு காரணமாக, கடலூர் நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களை மகிழ்விக்க, தன் உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் நடன நிகழ்ச்சியை ஏஞ்சலின் ஷெர்லீன், நடத்திக்காட்டினார்.  பரதம், கரகாட்டம் ஆடியதுடன், கண் மூலம் பிளேடு எடுப்பது, ஆணி மீது நடனம் ஆடுவது என ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆதரவற்றவர்களுக்காக நடனம் ஆடி மகிழ்ச்சி ஏற்படுத்தினார். அவரது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் நடனம் ஆடியது பலருக்கும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆதரவற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே தாம் அங்கு சென்று நடனம் ஆடியதாக கூறும் ஏஞ்சலின் ஷெர்லீன், அவர்களின் மகிழ்ச்சி தன்னை மகிழ்ச்சி அடைய செய்தததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்